அனுஷ்காவுக்காக காமெடியனை எச்சரித்த ஹீரோ!

Must read

images

னுஷ்கா நடித்த “சைஸ் ஜீரோ” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெலுங்கு காமெடி நடிகர் அலி, “அனுஷ்கா தொடை அழகோ அழு” என்றெல்லாம் மேடையில் பேசி பிறரை முகம் சுழிக்க வைத்தார்.

அலியின் பேச்சுக்கு பல தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், நடிகர் ராணாவுக்கு இந்த விசயம் தெரியவர, டென்ஷன் ஆகிவிட்டார். அனுஷ்காவின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் ராணா.  அனுஷ்காவுடன் ‘பாகுபலி’ படத்தில் நடித்துள்ளார் ராணா. 2-ம் பாகத்திலும் நடிக்கிறார்.

காமெடியன் அலியை அழைத்து, “நீங்கள் பேசியது தவறு” என்று கண்டித்திருக்கிறார். “எப்போதுமே மேடையில் கவனமாக பேச வேண்டும். ஆபாசமாக பேசினால் உங்கள் மீது இருக்கும் காமெடியன் இமேஜ் டேமேஜ் ஆகிவிடும்” என்று அறிவுரையும் கூறியிருக்கிறார்.

ராணாதான் ரியல் ஹீரோ!

Previous article
Next articleகபாலியில் ஐஸூ!

More articles

Latest article