‘அடுத்த தோனி’ – ரெய்னாவின் ஒப்பீட்டை மறுத்த ரோகித் ஷர்மா!

Must read

மும்பை: ரோகித் ஷர்மாதான், இந்திய அணியின் அடுத்த ‘எம்.எஸ்.தோனி’ என்ற சுரேஷ் ரெய்னாவின் கருத்திற்கு பதிலளித்த ரோகித், அப்படியான ஒப்பீடுகள் செய்யப்படக்கூடாது என்றுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் பேசிய ரெய்னா, “இந்திய அணியில், அடுத்த தோனியாக வருவதற்கு தகுதியுள்ள நபராக எனக்குத் தெரிகிறார் ரோகித் ஷர்மா. நான் இருவரின் தலைமையிலும் ஆடியிருக்கிறேன்.

அமைதியாக இருத்தல், பிறர் சொல்வதை கவனித்தல், சக வீரர்களுக்கு நம்பிக்கையளித்தல் உள்ளிட்ட பண்புகளை ரோகித் ஷர்மாவும் பெற்றுள்ளார்” என்றிருந்தார் அவர்.

தற்போது இதற்கு பதிலளித்துள்ள ரோகித் ஷர்மா, “நான் அந்தக் கருத்தைக் கேட்டேன். ஆனால், இப்படியான ஒப்பீடுகள் கூடாது என்பதே எனது எண்ணம். ஏனெனில், ஒவ்வொருவரும் தத்தமது தனித்தன்மைகளின் அடிப்படையில் செயல்படுபவர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பலம் & பலவீனங்கள் உண்டு” என்றுள்ளார்.

More articles

Latest article