”மோடியின் நண்பர் ட்ரம்ப் இந்தியாவுக்கு உதவுவாரா?’’
லடாக் பிராந்தியத்தில் சீனா அத்துமீறியுள்ள நிலையில் ’’சிவசேனா’ கட்சி பத்திரிகையான ‘சாம்னா’’ , இந்த விவகாரம் குறித்து காரசாரமாக தலையங்கம் தீட்டியுள்ளது.
அதில் இருந்து சில பகுதிகள்:
‘’ இந்தியாவை யாரும் சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம் ‘ என்று சொல்கிறார், பிரதமர் மோடி. சீன ராணுவ தாக்குதலில் லடாக்கில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இது சீண்டுதல் இல்லையா? அப்படியானால் இது என்ன?
1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பக்கம் அமெரிக்கா நின்றபோது, இந்தியாவுக்கு உதவியாக ரஷ்யா, தனது கடல்படையை அனுப்பி வைத்தது. அதுபோல் இப்போது பிரதமர் மோடியின் நண்பர் ட்ரம்ப், இந்தியாவுக்கு உதவி செய்வாரா?
சீனா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.
சீன நாட்டுத் தயாரிப்புகளை நாம் புறக்கணிக்க வேண்டும்.
சீன நாட்டு நிறுவனம் வெளியேற மகாராஷ்டிர அரசு முடிவு செய்தால், வேறு மாநிலம் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யக்கூடும். எனவே இந்த விஷயத்தில்,மத்திய அரசு ஒரு நிலையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்’’
இவ்வாறு சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகை எழுதியுள்ளது.
-பா.பாரதி