டெல்லி:

ல்வான் பள்ளத்தால் எதற்காக மோதல்? எதற்காக சண்டை? எதற்காக ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை? ப.சிதம்பரம் அடுக்கடுக்கான கேள்வி “சீனா அத்துமீறவில்லை என்றால் ஏன் 20 வீரர்கள் இறந்தார்கள்?” என அடுக்ககான கேள்விகளை பிரதமர் மோடிக்கு  ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

நேற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய மோடி, லடாக் எல்லையில் சீனா ஊடுருவவில்லை என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து எதிர்க் கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பிரதமருக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.  அவரது டிவிட்டர் பதிவில்,

இந்திய எல்லைக்குள் சீன துருப்புகள் எல்லையத் தாண்டி இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்று பிரதமர் திரு மோடி கூறியுள்ளார்.

அப்படியென்றால், எதற்காக மோதல்? எதற்காக சண்டை? எதற்காக ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை?எதற்காக வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கை?

அது உண்மை என்றால், மே 5-6ம் தேதிகளில் அங்கு ஏன் பிரச்னை ஏற்பட்டது? ஜூன் 16-17ம் தேதிகளில் இரு நாட்டு வீரர்களிடையே சண்டை நடந்தது ஏன்?

சீனா ஊடுருவவில்லை என்றால் ஜூன் 6-ல் நடந்த பேச்சுவார்த்தை என்ன? வானிலை நிலவரம் குறித்து பேசிக்கொண்டார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டார்களே, அது எங்கே நடந்தது? இந்திய நிலப்பகுதியிலா அல்லது சீன நிலப்பகுதியிலா-?

என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.