டெல்லியில் இருந்து கனடாவுக்கு செல்லும் Air India நிறுவனத்தின் AI185 என்ற விமானம் இன்று காலை 11.34 மணிக்கு புறப்பட்டது. இந்த சேவைக்கு 777-200LR வகை போயிங் விமானம் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், கனடா வழித்தடத்தில் இயக்க அனுமதி 777-300ER வகை விமானத்திற்கே வழங்கப்பட்டிருந்தது. இதனால், அனுமதி பெறாத 777-200LR விமானம் இயக்கப்பட்டதாக பின்னர் தெரியவந்தது.

விமானம் சுமார் 4 மணி நேரம் பறந்து, சீன வான்பரப்பில் குன்மிங் அருகே சென்றபோது தான் இந்த தவறு ஏர் இந்தியா அதிகாரிகளால் கண்டறியப்பட்டது. உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விமானி விமானத்தை மீண்டும் டெல்லி நோக்கி திருப்பினார். பின்னர், விமானம் பாதுகாப்பாக டெல்லியில் தரையிறங்கியது.

இந்த சம்பவத்தால், பயணிகள் சுமார் 9 மணி நேரம் பறந்து சென்று மீண்டும் தொடக்க இடமான டெல்லிக்கே திரும்பியுள்ளனர்.

மேலும், தேவையான அனுமதி இல்லாமல் இப்படியான விமானம் எவ்வாறு இயக்கப்பட்டது என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

[youtube-feed feed=1]