13346550_1119947161411644_3108698803829299543_n
டத்தை பாருங்கள்…  கடைக்கு முன்  மூவர் தினசரிகளை படித்துக்கொண்டிருக்கிறார்கள் அல்லவா.. அவர்களில்  வேட்டி – ஸ்லிப்பர் செருப்புடன்  தினசரியை புரட்டுகிறாரே.. எங்கோ பார்த்தது போல் இருக்கிறதா…  ஆம்.. அவர்தான் பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர் என். ரங்கசாமி.
எக்ஸ் கவுன்சிலர்களே, எட்டு வண்டிகளுடன் ஊர்வலம் நடத்துவது இங்கே தமிழ்நாட்டில் சகஜம். ஆனால் எக்ஸ் முதல்வர் சர்வசாதாரணமாக, டீ கடையில் டீ குடித்தபடியே தினசரியை புரட்டுகிறார்.
“ரங்கசாமி என்றல்ல… இங்கு ஆகப்பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இப்படி எளிமையாகத்தான் இருப்பார்கள். புதுச்சேரிவாசிகளுக்கு இது பழகிப்போன விசயம். தமிழ்நாட்டுக்கார்ரகளுக்குத்தான் அதிசயம்” என்கிறார்கள் புதுச்சேரியில்.
படம்:  Embalam Prasath