சென்னை

கொரோனா பாதிப்பின் விளைவாக இந்த வருட மார்கழி சங்கீத திருவிழாவில் ஏற்பட்டுள்ள  மாறுதல்கள் குறித்து இங்கு காண்போம்.

ம்கதி

சென்னையில் நடைபெறும் மார்கழி மாத சங்கீத திருவிழா என்றுமே நின்றதில்லை.  கடந்த 1920ல் நடந்த உலகப்போர், 2004 சுனாமி, 2015 சென்னை வெள்ளம், ஆகிய எதுவும் மார்கழி சங்கீத விழாக்களைப் பாதித்ததில்லை.   தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையிலும் மார்கழி சங்கீத திருவிழா நடைபெற உள்ளது.   ஆனால் அவை முன்பு போல் இல்லாமல் பல மாறுதல்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பிரபல பாடகி மகதியின் தந்தை திருவையாறு சேகர் இந்த மார்கழி சங்கீத திருவிழாவில் வீட்டிலேயே தங்காமல் விடியல் முதல் நள்ளிரவு வரை அனைத்து சபா கச்சேரிகளுக்கும் செல்வது வழக்கமாலுஜ்ம்.   அவ்வளவு ஏன் அவர் தனது மூன்று வேளை உணவு நேரத்தில் ஒரு வேளைக்குக் கூட வீட்டுக்கு வர மாட்டார். டிக்கட்டுகளுக்கு மட்டும் ரூ.30000 செலவழிக்கும் அவர் இம்முறை ஆன்லைன் கச்சேரிகளால் அதிருப்தி அடைந்துள்ளார்.  இந்த கச்சேரிகளில் சங்கீத வாசனையே இல்லை என அங்கலாய்த்து வருகிறார்.

 இதற்கு முன்பு ஏர் கண்டிஷன் வசதியுடன் உள்ள சபா அரங்குகளில் நடந்த கச்சேரிகள்  இப்போது மரத்தடியில் வெட்ட வெளியில் நடைபெற உள்ளன.   அதாவது விரைவில் காரில் அமர்ந்தபடி முகக் கவசம் மற்றும் சமுதாய இடைவெளியுடன் கச்சேரி கேட்கும் காலம் வர வாய்ப்புள்ளது.  அத்துடன்   கட்டிடத்துக்குள் நடைபெறும் கச்சேரிகளும் தொடர வாய்ப்புள்ளது.

ஆனலைன் கச்சேரிகள் குறித்து இசைக்கலைஞர் மகதி, “ஒரு ஸ்டூடியோவுக்குள் கச்சேரி நடத்துவது என்பது மிகவும் வேறுபட்டதாகும்.  ஒவ்வொரு ராகம் பாடும்போதும் சக கலைஞர்கள் மட்டுமின்றி ரசிகர்களின் பாராட்டுகளையும் நேரில் பெறுவது ஒரு அருமையான அனுபவமாகும். அவை எல்லாம் இப்போது எங்களுக்குப் பேரிழப்பாகும்..  இப்போது நான் ஒரு ஸ்டூடியோவில் அமர்ந்தபடி எனது தந்தை மற்றும் தாய ஆகிய இருவர் மட்டுமே ரசிகர்களாக வைத்துக் கொண்டு பாட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பல்லாண்டுகளாகப் பல சபாக்களில் இசை விழாக்களை தொடங்கி வைக்கும் நல்லி குப்புசாமி செட்டியார் பல கச்சேரிகளுக்கும் சென்று வருவார்.  ஆனால் தற்போது ஒரே ஒரு சபாவில் மட்டுமே நேரடி கச்சேரி நடைபெற உள்ளது.  இதனால் தாம் முதல் முறையாக ஒரே அரங்கில் மட்டும் சபா கச்சேரிகளைமட்டும் கேட்க உள்ளதாகத்  தெரிவித்துள்ளார்.  அந்த ஒரே சபா கீழ்ப்பக்கத்தில் உள்ள பாரதிய வித்யா பவன் சங்கீத விழா ஆகும்.

கொரோனா தொற்று காரணமாக 1000 பேர் அமரக்கூடிய அரங்குகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் பல அரங்குகளில் கச்சேரி நடத்துவதை விட ஆன்லைன் மூலம் நடத்தி அதிக ரசிகர்களைச் சென்றடையச் சபாக்கள் யோசித்து வருகிறது. இது குறித்து ஒரு 80 வயதான மூத்த ரசிகர் ஒருவர் கம்பியூட்டர் மூலம் கச்சேரியைக் கேட்பது தூரதர்ஷன் நிகழ்வைக் காண்பது போல் மிகவும் அலுப்பாக இருக்கும் எனக் கூறி உள்ளார்.

சங்கீத விழாக்கள் என்றாலே எம் எஸ் புளூ நிற சேலைகள் பெருமளவில் விற்பனை ஆகும்.  ஆனால் தற்போது அதில் மிகச் சிறிய அளவே விற்பனை ஆகி உள்ளதாக நல்லி குப்புசாமி செட்டி கூறி உள்ளார்.  இந்த வருடம் கச்சேரிகள் முன்பு போல் பட்டுப்புடவைகள், மல்லிகைப்பூ, நகைகளுடன் களை கட்டாது என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.  வீட்டிலேயே கச்சேரியைக் காண நேர்வதால் நன்கு உடை அணிந்து கச்சேரியைக் காண்பது மாறிப்போகும் எனக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் 275க்கு குறையாமல் கச்சேரிகளுக்கும் செல்லும் ரசிகையான லதா பாலசுப்ரமணியன் என்னும் 67 வயது மூதாட்டி கடந்த 14 வருடங்களாக கர்நாடக இசை விழாவில் வினா விடை பகுதியில் வெற்றி பெற்று வருகிறார்.  அவர், “இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக நான் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது. வீட்டிலேயே டிவி மூலம் கச்சேரிகளைக் காண உள்ளதால் எனக்குப் பட்டுப்புடவைகள் தேவை இருக்காது. எனவே நான் நைட்டிகளை வாங்க உள்ளேன்” என நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி சபாக்களில் கேண்டின்கள் நடத்தும் பலரும் இந்த வருடம் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கச்சேரிகள் அரங்கில் நடந்தாலும் தற்போதைய நிலையில் வெளியில் உணவருந்த பலரும் பயந்து வருகிறார்கள் என்பதும் உண்மையாகும்.  காசி அல்வா, அசோகா அல்வா, புடலை ரோஸ்ட் ஆகியவற்றை உண்ணக் கச்சேரிகளுக்கு வரும் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  அது மட்டுமின்றி ரசிகர்கள் கேண்டீனில் சாப்பிட்டபடி கச்சேரிகளை அலசி ஆய்வதும் இந்த வருடம் இருக்காது.

ஒவ்வொரு மார்கழி மாத விழாக்களையும்  காண உலகெங்கும் இருந்து குவியும் ரசிகர்கள் வருகை இல்லாததால் சென்னை களை இழக்கும் என பலரும் கூறுகின்றனர்.  அது மட்டுமின்றி புகழ் பெற்ற பாடகர்களுக்கு எக்கச்சக்கமாக டிக்கட் விற்பனை ஆவது,  எந்த பாடகர் நிகழ்வையும் தவற விடக்கூடாது என்பத|ற்காக மொத்தமாக அனைத்து டிக்கட்டுகளையும் வாங்குவது போன்றவை இந்த வருடம் இருக்காது.  முக்கியமாகக் கைக்குட்டையை போட்டு இடம் பிடிக்கும் கலாச்சாரம் அடியோடு தொலைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.