மெல்போர்ன்: இந்திய அணியினர் தங்களை தொடர்ந்து அழுத்தத்திலேயே வைத்திருந்தனர் என்று புலம்பியுள்ளார் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன்.
இன்றையப் போட்டியில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களிலேயே அதிகபட்சமாக 48 ரன்களை அடித்தவர் அவர்தான். அரைசதம் எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவின் புதிய நட்சத்திரம் முகமது சிராஜுவிடம் சிக்கி விக்கெட்டை இழந்தார். அவர் 132 பந்துகளை சந்தித்து 48 ரன்களை அடித்திருந்தார்.
அவர் கூறியுள்ளதாவது, “முதல் நாளில், முதலில் பேட்டிங் தேர்வுசெய்த நிலையில், எங்களால் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும். ஆனால், இந்தியர்கள் எங்களை முழு அளவில் அழுத்தத்திலேயே வைத்திருந்தனர்.
இதனால், நாங்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே வந்தோம். இந்த நாள் எங்களுக்கு ஏமாற்றமான நாளாக அமைந்தது” என்று புலம்பியுள்ளார்.