டில்லி:

ஏமாற்றிய காதலனை பழிவாங்க அவரது வீட்டு முன் இளம் பெண் பாடி ஆடிய காட்சி வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. டில்லி அருகே உள்ள குருகிராம் பகுதியில் தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்க பெண் ஒருவர் வித்தியாசமாக திட்டமிட்டார்.

‘ராஜா ஹிந்துஸ்தானி’ இந்திப்படத்தில் பிரபல நடிகர்அமீர் கான் மது போதையில் ஆடிப்பாடுவது போல ஒரு பாடல் காட்சியில் நடித்திருப்பார். அதே பாடலைப் பாடி காதலன் வீட்டு முன் ஆடிப்பாடினார் அந்த இளம் பெண். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

[embedyt] https://www.youtube.com/watch?v=xGkcm6T1baw[/embedyt]

 

[youtube-feed feed=1]