விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருபவர் வனிதா விஜயகுமார்.
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தற்போது தான் ஒளிபரப்பாகி வருகிறது.
இதற்கிடையே தான் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து தான் விலகுவதாக சில தினங்களுக்கு முன்னர் வனிதா விஜயகுமார் அறிவித்தார்.
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சீனியர் நபரால் நான் துன்புறுத்தப்பட்டேன், அவமானப்படுத்தப்பட்டேன், மோசமாக நடத்தப்பட்டேன் என கூறியுள்ளார்.
வனிதா குறிப்பிட்ட அந்த சீனியர் நடிகை ரம்யா கிருஷ்ணன் என நெட்டிசன்கள் தெரிவித்து வந்து வந்தனர்.
இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டவர்கள் தங்களது நடனத்திறமையை வெளிப்படுத்துகிறார்கள். வனிதா காளி கெட்டப்பில் வருகிறார். மேலும் மற்ற போட்டியாளர்களுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று வனிதா கூறுகிறார். இதை கேட்டு ரம்யாகிருஷ்ணன் கோபத்தில் மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும் என்று கத்துகிறார். இதையடுத்து வனிதா செட்டில் இருந்து கிளம்புகிறார்.
இந்த எபிசோட் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது. அப்போது தான் வனிதா விஜயகுமார் – ரம்யாகிருஷ்ணன் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் முற்றிலுமாக தெரிய வரும். இந்த புரோமோ இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.