மும்பை
அமெரிக்க விசாவை பெற சமூக வலைதள செயல்பாடு குறித்த விவரங்கள் கேட்கப்படுகின்றன.
இந்தியாவில் சென்ற வருடம் செப்டம்பர் வரை 8.72 லட்சம் அமெரிக்க விசா வழங்கப்பட்டுள்ளன. உலக அளவில் அமெரிக்கா வருடத்துக்கு 1.47 கோடி மக்களுக்கு விசா வழங்கி வருகிறது. அமெரிக்க விசா பெற மக்கள் பெருமளவில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த விசாக்களின் படிவமான டி 160 மற்றும் டி260 ஆகியவற்றில் சர்வதேச அளவில் பல புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த இரு படிவங்களும் ஆன்லைன் மூலம் அளிக்கப்படலாம். இந்த படிவங்களில் தற்போது விண்ணப்பதாரர்களின் சமூக வலை தள பெயர்கள் மற்றும் பதிவுகள் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன. குறிப்பாக முகநூல், ஃப்ளிக்கர், கூகுள்+, இன்ஸ்டாகிராம், லின்க்ட் இன், மற்றும் யூ டியுப் ஆகிய சமூக வலைதள செயல்பாடு குறித்த விவரங்கள் கேட்கப்படுகின்றன. உபயோகிப் பெயர் மற்றும் பதிவுகள் தற்போது கேட்கப்படுகின்றன. இந்த தளங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட உள்ளது.
அதைத் தவிர விசாவுக்கான நேர்காணலின் போது விண்ணப்பதாரர்களின் பதிவுகள் குரித்து விளக்கங்கள் கேட்கப்பட உள்ளன. இதில் தூதரக அதிகாரிகள் திருப்தி அடையவில்லை எனில் அவர்களுக்கு விசா விண்ணப்பங்களை நிராகரிக்க உரிமை உண்டு. அவர்களுடைய முடிவே இறுதியானது என்பதால் இதை எதிர்ப்பது இயலாத காரியமாகும். அத்துடன் இந்த விதிமுறைகள் மாணவர் மற்றும் பயணிகள் விசாவுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது