லண்டன்: இங்கிலாந்தில் புதிய பிரதமருக்குகான தேர்தல் முடிவு இன்று வெளியாக உள்ளது. அங்கு இறுதிப்போட்டியில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ரிஷி சுனக்குக்கும், லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், நாட்டின் புதிய பிரதமராக யார் தேர்வாவார்கள் என்ற எதிர்பார்ப்பு இங்கிலாந்து மட்டுமின்றி இந்தியா மற்றும் உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி அந்நாட்டு வழங்கப்படி நடைபெற்று வருகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவரே நாட்டின் பிரதமராக பதவி ஏற்பார். இதற்கான பல கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்துள்ளனர். இறுதிக்கட்ட தேர்தல் கடந்த 2ந் தேதி முடிவடைந்தது.
பிரதமர் பதவிக்கான போட்டியின் தொடக்கத்தில் 7 பேர் களத்தில் நின்ற நிலையில், இறுதியாகில், இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவரும், முன்னாள் நிதியமைச்சரு மான, ரிஷி சுனக், மற்றொரு அமைச்சர் லிஸ் டிரஸ் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்ய வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர் நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்பார்.
இதற்கிடையில் செய்தியாளகளுக்கு பேட்டி அளித்த ரிஷிசுணக், தான் தோற்கடிக்கப்பட்டால், அடுத்த அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். அதுபோல, போட்டியில் உள்ள வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் தோற்கடிக்கப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடரவும், ரிச்மண்ட், யார்க்ஷயரில் உள்ள தனது தொகுதி மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். தமக்கு ஆதரவளித்த சகாக்கள், பிரச்சாரக் குழுவினர் மற்றும் அனைத்து கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ரிஷசுனக் குறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை சந்திப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தத் தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால் வெள்ளையர் அல்லாத முதல் இங்கிலாந்து பிரதமர் என்ற சிறப்பைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.