ஸ்ரீஹரிகோட்டா

நாளை இரவு 9.50 மணிக்கு பி எஸ் எல் வி சி 60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இஸ்ரோ இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறது. வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டு இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது.

இதில் ஒரு பகுதியான ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நாளை இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதற்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ இன்று இரவு 8.58 மணிக்கு தொடங்குகிறது.

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டில் ‘ஸ்பேடெக்ஸ்-ஏ’, ‘ஸ்பேடெக்ஸ்-பி’ என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் 2 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படுகிறது.

இஸ்ரோ விஞ்ஞானிகள்.தனித்தனியான இரு விண்கலன்களை, விண்வெளியில் சென்று இணைய செய்வதற்கான இந்த சோதனை வெற்றி பெற்றால், இதை சாதித்த 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.