போர்ட் பிளேயர்

பிரதமர் மோடி இன்று அந்தமான் வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தைக் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்

இன்று பிரதமர் மோடி அந்தமான், நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் போர்ட் பிளேயரில் உள்ள வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

கட்டுமான பணிகள் கடந்த 2019ம் ஆண்டு போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் ரூ.707 கோடி ரூபாய் செலவில் தொடங்கின. கடந்த 2022ம் ஆண்டு இந்த கட்டிடத்தைத் திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில், ஒருங்கிணைந்த வீர சாவர்கர் பன்னாட்டு விமான நிலைய முனையத்தைப் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாகத் திறந்து வைக்கிறார். இது ஒரே நேரத்தில் 10 விமானங்களை நிறுத்தும் வகையில் கட்டப்பட்டு ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.

இந்த புதிய முனையும் கடலையும் இயற்கையையும் பிரதிபலிக்கும் வகையில் சிப்பி வடிவில் இந்த புதிய முனையம் அமைக்கப்பட்டு  இங்கு இரட்டை அடுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.  இதனால் வெப்பம் குறைவதோடு பகல் நேரத்தில் சூரிய வெளிச்சம் கிடைக்கும். எனவே மின்விளக்கின் பயன்பாடு குறைந்து மின்சாரம் சேமிப்பாகும்.