டெல்லி

ன்று முழுவதும்  நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மத்திய உள்துறை அமைச்ச்ர் அமித்ஷா நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக பேசும்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது. மேலும் அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுள் பெயரை கூறலாம் என அமித்ஷா பேசியுள்ளார்.

நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை கூடியபோது, அம்பேத்கரை பற்றிய சர்ச்சைப் பேச்சுக்கு மத்திய அமைஅர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அம்பேத்கர் குறித்த பேச்சு காரணமாக எழுந்த கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை (19-ம் தேதி) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.