அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் விஜய் நடித்துள்ள வாரிசு ஆகிய இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் இரண்டு வாரங்களுக்கு முன் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தீபாவளி அன்று கையில் சுத்தியலுடன் புறப்படும் விஜய்யின் புதிய போஸ்டரை வெளியிட்ட வாரிசு படக்குழு அந்தப் படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என்பதை உறுதி செய்து ரசிகர்களுக்கு இனிப்பு ஊட்டியது.
#ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth @ZeeStudios_ @Udhaystalin @BayViewProjOffl @RedGiantMovies_ @Kalaignartv_off @NetflixIndia #RomeoPictures @mynameisraahul @SureshChandraa #NiravShah @GhibranOfficial #Milan @SupremeSundar_ @editorvijay pic.twitter.com/G3NBbbibiH
— Boney Kapoor (@BoneyKapoor) October 28, 2022
இந்த நிலையில் அஜித் நடிக்கும் துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் இன்று பதிவிட்டுள்ள ட்வீடில் #ThunivuPongal என்று குறிப்பிட்டு துணிவு திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீசாவதை உறுதிசெய்தார்.
ஜனவரி 12 ம் தேதி அஜித்தின் துணிவு படமும், ஜனவரி 13 ம் தேதி விஜய்யின் வாரிசு படமும் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இவ்விரு படங்களின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதற்கு முன் 2014 ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா படத்துடன் அஜித் நடித்த வீரம் வெளியானது, தற்போது ஒன்பது ஆண்டுகள் கழித்து அஜித், விஜய் படங்கள் வெளியாகிறது.