ஐதராபாத்:

கிணற்றுக்குள் சிக்கிய தொழிலாளர்களை காப்பாற்ற அதிரடியாக கிணற்றில் குதித்த தெலுங்கானா மாநில இன்ஸ்பெக்டர் தொடர்பான வீடியோ  வைரலாகி வருகிறது.

சம்பவத்தன்று ஜம்முகுந்தா பகுதியில் இரண்டு தொழிலாளர்கள் கிணற்றுக்குள் சிக்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற ஜம்முகுந்தா இன்ஸ்பெக்டர் கோரபள்ளி சூஷானே ரெட்டி,  60 அடி ஆழமான கிணற்றில் குதித்து, கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய இரு தொழிலாளர்களை  காப்பாற்றினார்.

கிணற்றுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தீயணைப்பு துறையினர் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அவர்களை எச்சரிக்கை செய்த இன்ஸ்பெகடர், நேரத்தை வீணாக்காமல் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்.

பின்னர் தீயணைப்பு துறையினர் ஏணியை கிணற்றுக்குள் இறக்கினர். அதன்மூலம்,. இன்ஸ்பெக்டர் மற்றும் இரு தொழிலாளர்கள் பாதுகாப்பாக பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

துணிச்சல் மிக்க ஜம்முகுந்தா இன்ஸ்பெக்டர் கோரபள்ளி சூஷானே ரெட்டியின் செயலை மாநில டிஜிபி பாராட்டினார்.