உலகின் முக்கிய தலைவர்களை ஆட்டுவித்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, எப்ஸ்டீனுடனான தொடர்பு காரணமாக, இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ பட்டத்தை இழந்து அரண்மனையை விட்டு வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆட்சியாளர்கள் மட்டுமன்றி தொழில்துறையில் உலகில் முன்னணியில் இருந்தவர்களுக்கும் எப்ஸ்டீன் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார் என்பது அமெரிக்க நீதித்துறை (DOJ) சமீபத்தில் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

முன்னணி பணக்காரரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனருமான பில் கேட்ஸ் அதில் முக்கிய இடம்பிடித்துள்ளார்.

மென்பொருள் நிறுவனம் தவிர மருந்து மற்றும் அறிவியல் ஆராய்ச்சி என பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள பில் கேட்ஸ் உலகம் முழுவதும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்குவதன் மூலம் மிகப்பெரும் பரோபகாரியாக அறியப்படுகிறார்.

அதேவேளையில், கொரோனா காலகட்டத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பெருந்தொற்று காலத்தில் பணம் ஈட்டுவது எப்படி என்று திட்டமிட்டு செயல்பட்டது எப்ஸ்டீன் மற்றும் பில் கேட்ஸ் இடையிலான தகவல் பரிமாற்றங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தவிர, உலகின் எந்தவொரு சட்டநிறுவனம் அல்லது ஆலோசகரையும் அணுகும் வாய்ப்பு பில் கேட்ஸுக்கு இருந்தபோதும், தனது நிறுவனம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றுக்கு பாலியல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற எப்ஸ்டீனை பிரதிநிதியாக நியமிக்கக்கோரி பரிந்துரைத்த கடிதம் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் கொரோனா காலகட்டத்தில் வியாபாரம் செய்வது தொடர்பான திட்டத்துடன் உலக தலைவர்களின் நெருங்கிய கூட்டாளியும் பாலியல் குற்றவாளியுமான எப்ஸ்டீனுடன் பில் கேட்ஸ் கைகோர்த்து வலம்வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எப்ஸ்டீன் கோப்புகள்: கொரோனா பெருந்தொற்று மனிதாபிமான பிரச்சனையா அல்லது திட்டமிட்ட வியாபாரமா? – அதிர்ச்சி தகவல்கள்

[youtube-feed feed=1]