டி20 உலக கோப்பை போட்டியின் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியது.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதுகுறித்து பதிவிட்ட தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளருமான கேரி கிறிஸ்டன் “பாகிஸ்தான் அணி வீரர்களிடம் ஒற்றுமை இல்லை.

ஒருவருக்கு ஒருவர் இணக்கமாக ஒரு குழுவாக செயல்படுவதில்லை இதுபோன்ற ஒரு மோசமான அணியை வாழ்நாளில் பார்த்தது இல்லை” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், “2011ம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக நீங்கள் இருந்தபோது இந்தியா உலக கோப்பை வென்றது.

https://x.com/harbhajan_singh/status/1802710553783144500

நீங்கள் மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க வாருங்கள்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.