பெங்களூரு:
தொழில் நஷ்டம் காரணமாக மனைவி மற்றும் பெற்ற மகனை தூக்கிட்டு கொலை செய்த தந்தையின் கொடூர செயலை தடுக்க முடியாமல், அவரது செயலை வீடியோ எடுத்து வெளிக் கொணர்ந்துள்ளார் அவரது மகள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் சட்பண்ட் நிறுவனம் நடத்தி வந்த நபர், தொழிலில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்ட தால் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து, தனது மனைவி மற்றும் மகனை தூக்கு மாட்டி கொலை செய்துள்ள நிலையில், அவரது பிடிக்குள் சிக்காத 17வயது மகள் அலறி கூப்பாடு போட்டதுடன், தனது தந்தையின் கொடூர செயலை தனது மொபைலில் வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்ட நிலையில் இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கும் புகார் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நிலையில், மனைவி மகனை கொலை செய்த நபரை கைது செய்தனர்.
மேலும அந்த இளம்பெண் எடுத்த வீடியோவையும் பறிமுதல் செய்தனர். அதில், அந்த நபர் முதலில் தனது 38 வயது மனைவியைக் கொன்றவர். பின்னர் தனது 12 வயது மகனை அவரது கழுத்தில் போர்வையை சுற்றி இறுக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தைப் பார்த்த அவரது 17 வயது மகள் கதறியபடியே சம்பவத்தை செல்போனில் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர், தான் ஒரு சிட் ஃபண்ட் நிறுவனம் நடத்தி வந்ததாகவும், அதில் ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டத்தில் இருந்த மீள முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.