டாப்ஸி சினிமாவில் அறிமுகமாகி 11 வருடங்கள் ஆகிறது. தமிழ், தெலுங்கு இந்தி என அணைத்து மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.
டாப்ஸி சினிமாவில் அறிமுகமாகி 11 வருடங்கள் ஆகிறது. தமிழ், தெலுங்கில் நடித்தாலும், இன்றைய தேதியில் இந்தியில்தான் அதிக படங்கள் நடிக்கிறார்.
இந்நிலையில் டாப்ஸி அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
முதல் தயாரிப்பாக ப்ளெர் திரைப்படம் தயாராகிறது. டாப்ஸியுடன் ஸீ ஸ்டுடியோஸும் தயாரிப்பில் கைகோர்த்துள்ளது.
த்ரில்லர் திரைப்படமான இதன் பர்ஸ்ட் லுக்கை நேற்று தாப்ஸி வெளியிட்டார். இதில் டாப்ஸியே நடிக்கிறார். இந்தப் படத்தை Ajay Bahl இயக்குகிறார். பவன் சோனி படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். 2022 இல் ப்ளெர் வெளியாகும் என அறிவித்துள்ளார் தாப்ஸி.