
கோலாலம்பூர்,
மலேசியாவில் பெண் ஒருவர் குழந்தையை கடுமையாக தாக்கிய வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவியது.
பதபதைக்கும் அந்த வீடியோவை பார்த்தவர்கள்… அந்த பெண்ணை, இவள் பெண் அல்ல பேய் என்று கடுமையாக வசை பாடினார்கள்..
மேலும் உடனே அவரை கைது செய்து, குழந்தையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
உணவை சரிவர சாப்பிடாததாலும், கீழே சாப்பாட்டை சிந்தியதாலும், 6 வயது குழந்தையை பெண் ஒருவர் ஸ்கேலால் கொடூரமாக அடித்து துன்புறுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து தொடர்ந்து,
அந்தப் பெண்ணின்அட்சரஸை கண்டுபிடித்து நள்ளிரவே மலேசியா போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.
விசாரயையில், அந்த பெண் , அந்தக் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதாக கூறியுள்ளார்.
மலேசியாவின் புசாங்கில் உள்ள தமன் புச்சாங் பர்டானாவில் உள்ள வீடு ஒன்றில்தான் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேலும், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அந்த பெண் தமிழில்திட்டியதால், அவர் தமிழகத்தில் இருந்து அங்கு வேலைக்கு சென்றவரா அல்லது அங்கேயே வசித்து வருபவரா என்று விசாரணை நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
[youtube-feed feed=1]