தமிழ் திரை உலகம் இருட்டடிப்புச் செய்த காமிரா மாமேதை, மிகச்சிறந்த சாகச ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஒளிப்பதிவு ஜாம்பவான் கர்ணன் அவர்கள் வன்னிய குல க்ஷத்ரியர்.
மேற்கத்திய ஒளிப்பதிவு பாணியை தத்ரூபமாக தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகமப்படுத்திய பெருமை இவரை மட்டுமே சாரும். கர்ணன் இயக்கிய ஜம்பு திரைப்படத்தில் நீருக்கு அடியில் இருக்கும் பொருட்களை தெள்ளத்தெளிவாக நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டியவிதம் பிரமிக்க வைக்கும்.
திரைப்படங்களில் காட்டும் குதிரை ஓட்டம், குதிரை சண்டை காட்சிகளை தத்ரூபமாக கையாளும் விதம் இவருக்கு மட்டுமே உரித்தான சிறப்பு. பல சாகச காட்சிகளை திறம்பட படம் எடுக்கும் திறனாளர்.
தங்க இரத்தினம் படத்தில் இரண்டு பக்கமும் கைக்கு எட்டாத அளவுக்கு அலைகள் வந்து மோதிக்கொள்ளும் காட்சி, பிரமிக்க வைக்கும். இவர் எம்.ஜி.ஆர் நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிவாஜி கணேசன் நடித்த கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், ரஜினிகாந்த் நடித்த பொல்லாதவன், இந்த படத்தில் இவரது ஒளிப்பதிவை கண்டு வியந்து ரஜினிகாந்த், ஒளிப்பதிவாளர் கர்ணனுக்கு வைர மோதிரம் பரிசாக அளித்தார்.
கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல், சிவப்பு சூரியன் உள்ளிட்ட 150 படங்களுக்கு மேலாக ஒளிப்பதிவாளராகவும், 25 திரைப்படங்களில் இயக்குனராகவும் இருந்து முத்திரைப் பதித்துள்ளார். ஒளிப்பதிவாளர் கர்ணன் தமிழக அரசின் 2003-ம் ஆண்டுக்கான ‘ராஜா சாண்டோ வர்த்தக விருது’ பெற்றவர்.
புகழ்பெற்ற நடிகைகளான கே.ஆர்.விஜயா, மாதவி ஆகிய இருவரையும் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். கர்ணன் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் சில :
காலம் வெல்லும் (1970)
ஜக்கம்மா (1972)
கங்கா (1972)
ஒரே தந்தை (1976)
எதற்கும் துணிந்தவர்கள் (1977)
புதிய தோரணங்கள் (1980)
ஜம்பு (1980)
ஒளிப்பதிவாளர் கர்ணன் மாரடைப்பு காரணமாக தனது 79 வது வயதில் சென்னை சூளைமேட்டில் 13 டிசம்பர் 2012 ம் ஆண்டு மறைந்தார்.