வைபவ் நடிப்பில் யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாணா’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன.
இந்தப் படத்தில் பாண்டியராஜன், யோகி பாபு, நந்திதா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நோபல் மூவீஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.சி. கலைமாமணி & எம்.கே.லக்ஷ்மி கலைமாமணி ஆகியோர் தயாரித்துள்ளனர். எச்.சனாவுல்லா கான், பிரசாந்த் ரவி, எஸ்.சந்தோஷ் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர். விஷால் சந்திரசேகர் (இசை), சிவா ஜி.ஆர்.என் (ஒளிப்பதிவு) செய்துள்ளனர்
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 24-ம் தேதி படம் வெளியீடு என அறிவித்துள்ளது படக்குழு.