டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்து வந்த சுனில் அரோரா ஒய்வுபெற்ற நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக  சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டிருந்தார்.  அவர் இன்று பதவி ஏற்றார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையர்களில் ஒருவராபக சுஷில் சந்திரா 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், சுனில் அரோரா நேற்று ஓய்வுபெற்ற நிலையில், இன்று இந்திய தேர்தல் கமிணனின் 24-வது தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவி ஏற்றுக்கொண்டார். இவரது பதவிக்காலம்  2022-ம் ஆண்டு மே மாதம் வரை உள்ளது.

சுஷில் சந்திரா, 1980-ம் ஆண்டு இந்திய வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரியாவார். சுமார் 39 ஆண்டுகள் வருமான வரித்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 2016-ம் ஆண்டு மத்திய நேரடி வரித்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவரது பதவிக்காலத்தில்,  கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.