மும்பை:
ஸ்ரீதேவிக்கு இதய நோய் குறித்த அறிகுறி எதுவும் முன்பு இருந்தது கிடையாது என்று கியைடாது என்று அவரது மைத்துனரும், நடிகருமான சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி நேற்று நள்ளிரவு துபாயில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இது குறித்து சங்சய் கபூர் கூறுகையில், ‘‘ ஸ்ரீதேவியின் திடீர் மரணம் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பு ஏற்பட்ட போது அவர் ஓட்டல் அறையில் தான் இருந்தார். நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துவிட்டோம். அவருக்கு இருதய நோய் இருந்ததற்கான வரலாறு எதுவும் கிடையாது’’ என்றார்.
சஞ்சய் கபூர் இன்று காலை துபாய் புறப்பட்டுச் சென்றார். ஸ்ரீதேவி உடல் இன்று இரவுக்குள் தனி விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.