டில்லி,
புதியதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டில் எழுத்து பிழை ஏதும் இல்லை. அது கொங்கனி எழுத்து என்று குறிப்பிடப்பட்டுஉள்ளது.
புதியதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டில் எழுத்து பிழை உள்ளதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிரதமர் மோடி, 2000 ரூபாய் புதிய நோட்டை அறிமுகம் செய்து வைத்தார்.
பதிய நோட்டை பார்த்த மக்கள் அதில் இந்தி மொழியில் 2000 ரூபாய் என்பது தவறாக எழுதப்பட்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்தனர்.
ஒரு சிலர் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் புகார் அளித்தனர். ரூபாய் நோட்டின் எழுத்துப் பிழை பற்றிய உண்மை தெரிய வந்துள்ளது.
ஆனால், பொதுமக்கள் கூறியபடி அது எழுத்துபிழை அல்ல என்றும், கொங்கனி எனப்படும் மொழியின் எழுத்து என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய ரூபாய் நோட்டின் பின்புறம் 2000 ரூபாய் என்பது தமிழ் உள்பட 15 மொழிகளில் அச்சிடப்பட்டு உள்ளது. நோட்டின் பெரும்பாலான இடங்களில் இந்தி மொழியே இடம்பெற்றுள்ளது. அதேபோல் இந்த புதிய நோட்டு முழுவதும் இந்தியே இருப்பதால், நோட்டின் பின் பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள 15 மொழிகளின் பட்டியலில் இந்தி சேர்க்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்தி மொழிபோல காணப்படும் அந்த எழுத்து கொங்கனி மொழி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையே ஒருசிலர் தவறாக புரிந்துகொண்டு, புகார் கூறி உள்ளனர்.
கொங்கனி மொழிக்கு என்று பிரத்யேக எழுத்துவடிவம் இல்லை. கொங்கனி மொழியை தேவனகிரி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் எழுதுவார்கள்.
கோவாவில் உள்ளவர்கள் தேவனகிரியிலும், கர்நாடக எல்லையையொட்டி வசிப்பவர்கள் கன்னட எழுத்து வடிவத்திலும் கொங்கனியை எழுதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.