லண்டன்: எப்போதுமே திறமையான அணி என்ற பெயரைப் பெற்றிருந்தும், உலகளாவிய போட்டித் தொடர்களில், மிக முக்கியமான கட்டங்களில் தொடர்ந்து சொதப்பும் தென்னாப்ரிக்க அணி, இந்த உலகக்கோப்பையில் பலம் மற்றும் பலவீனங்களுடன் களம் இறங்கவுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு முதன்முதலாக உலகக்கோப்பை போட்டித் தொடரில் விளையாடியது தென்னாப்ரிக்க அணி என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
இந்த உலகக்கோப்பை தொடரில், பெரிய வேகப்பந்து பட்டாளத்துடன் களம் இறங்குகிறது அந்த அணி. டேல் ஸ்டெயின் முதன்மையான பந்து வீச்சாளராக இருக்க,எதிரணியை மிரட்டும் ரபாடாவும் களமிறங்கவுள்ளார்.
இவர்கள் தவிர, லுங்கி கிடி, ஆண்டில் ஃபெலுக்வியோ, கிரிஸ் மோரிஸ் மற்றும் ட்வெய்னே பிரிடோரியஸ் ஆகியோரும் உள்ளனர்.
அதேசமயம், ஹசிம் ஆம்லாவின் மோசமான ஃபார்ம், ஷான் பொல்லாக், காலிஸ், க்ரீம் ஸ்மித் மற்றும் டி வில்லியர்ஸ் போன்ற ஸ்டார் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் களமிறங்குவது உள்ளிட்ட பலவீனங்களும் அந்த அணிக்கு உள்ளன.