அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவானது. மாலை 5 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன.
பிராந்தியம் முழுவதும் அதிர்வுகள் இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.