சஷ்டி  விரதம் என்பது  மிகப் பெரிய விரதம்

திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு.

 

ஐஸ்வர்யத்தைக் தரக்கூடியது ஆறு (6) என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது.

ஜோதிடத்தில் 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன்.

இவர் லட்சுமியின் அம்சமாகக் கருதப்படுகிறார்.

திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றைத் தரக்கூடியவரும் சுக்கிரன்தான்.

எனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம்.

16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு கருதப்படுகிறது.

எனவே குழந்தைப்பேற்றுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.

இதன் காரணமாகக் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது தவறு.

சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் அனைத்து சிறப்பையும் பெற முடியும் என்பதை உறுதியுடன் சொல்லலாம்.

சஷ்டிக்கு முன்பாக திருச்செந்தூருக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்து சூரியன் மறைவுக்குப் பின்னர் சிறிதளவு சாப்பிட்டு விட்டு, இரவில் பால் மட்டும் அருந்தி, மறுநாள் காலை கடுமையான விரதம் இருந்து முருகனை வணங்கி விட்டு வந்தவர்களுக்குப் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

30 ஆண்டுகளாகத் தீராத வழக்குகள், 14 ஆண்டுகளாகத் தீராத நோய் எனப் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்துள்ளது.

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது தமிழில் பரவலாகக் கூறப்படும் பழமொழிகளில் ஒன்று.

சஷ்டி (சட்டி) விரதம் இருந்தால் அகப்பையில் (கருப்பையில் குழந்தை) வரும் என்று பொருள் கூறுகின்றனர்.

இங்கு அகப்பை என்பதைக் கருப்பை என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது.

மனசுக்கும் அகம் என்று பொருள் உண்டு என்பதால், மனதளவில் உள்ள குழப்பங்களுக்கும் சஷ்டி விரதம் பலனளிக்கும்.

இறைவனின் அருள் கிடைப்பதன் மூலமாகப் பொருள் கிடைக்கலாம்