தானே:
மகாராஷ்டிரா தானே நகரில் உணவின் தரம் குறித்து கேள்வி கேட்ட வாடிக்கையாளர் மீது ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா தானே நகரில் சாலையோர உணவகம் ஒன்றில் கடை உரிமையாளருக்கும், அவரது கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கடை உரிமையாளர் மீது அந்த வாடிக்கையாளர்கள் எதனையோ வீசுகிறார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் அடுப்பு சட்டியில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை எடுத்து அவர்கள் மீது ஊற்றிறார். அதோடு எண்ணெயை பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அவர்களை விரட்டிக் கொண்டே ஓடினார். இந்தக் காட்சி அந்த உணவகத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
[embedyt] https://www.youtube.com/watch?v=kVVd2KsFeWw[/embedyt]