நெட்டிசன்:

ஸ்டான்லி ராஜன் (Stanley Rajan ) அவர்களின் முகநூல் பதிவு:

மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தையே உருவாக்கவல்லது ஆர்.எஸ்.எஸ்: மோகன் பகவத்

அரை டவுசரும், ஒரு கம்பும் கொஞ்சம் முன்னேறி கொக்கு சுடும் துப்பாக்கியும் வைத்துகொண்டால் அது ராணுவமாம்.

அப்படியானால் இந்த அத்வானி, மோடிக்கு எல்லாம் இருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பினை நீக்கி இவர்களை அமர்த்திவிடலாமா?

காஷ்மீர் சீன எல்லை எல்லாம் இவர்களை நிறுத்திவிடலாமா?

பின் எதற்கு ராணுவம் அதற்கொரு பட்ஜெட்..

மும்பை தாக்குதல் நடந்தபொழுதெல்லாம் இந்த ஆர்.எஸ்.எஸ் ராணுவம் என்ன செய்தது?

ஒன்று செய்யலாம், சீனாவுடன் யுத்த அறிவிப்பினை செய்துவிட்டு இவரை ஆர்.எஸ்.எஸ்கார ராணுவத்தை திரட்டி போரிடுங்கள் என சொல்லிவிடலாம்

அதன்பின் நாடு எவ்வளவு அமைதியாக வளமாக இருக்கும் தெரியுமா?

 

[youtube-feed feed=1]