லண்டன்: வங்கி மோசடியில் சிக்கி பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற மதுபான வியாபாரி விஜய் மல்லையா, தனது வழக்கு விஷயத்தில், இந்திய வரி செலுத்துவோரின் பணத்தை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வீணாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மல்லையாவின் ஒரு பிரிட்டன் வங்கிக் கணக்கில் உள்ள 2,60000 பவுண்டுகள் பணத்தின் மீதான முடக்கத்தை நீக்க, அந்நாட்டு உயர்நீதிமன்ற நீதிபதி மறத்துவிட்டதை அடுத்து, அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
தான், இந்திய பொதுத்துறை வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய பணத்தை திரும்ப செலுத்திவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “லண்டனில் வழக்கு நடத்துவதற்கு, எஸ்பிஐ வங்கி தேவையில்லாமல் அதிக தொகையை செலவு செய்கிறது. இது, இந்திய வரி செலுத்துவோரின் பணம்.
எஸ்பிஐ வங்கியின் வழக்கறிஞர்கள், எனக்கு எதிரான வழக்கில் தங்களுடைய சாதனைகளை தாங்களாகவே முன்னிறுத்திக் கொள்கின்றனர். இதனால் வீணாவதென்னவோ, இந்தியாவின் வரி செலுத்துவோர் பணம்தான்” என்றார்.
– மதுரை மாயாண்டி