டெல்லி: ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சஞ்சய் மல்கோத்ரா இன்று   மத்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக  பொறுப்பேற்ற்றார்.

மத்திய ரிசர்வ் வங்கியின் 25-வது ஆளுநராக இருந்து வந்த சக்தி காந்த தாஸ் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, புதிய ஆளுநராக மத்திய வருவாய் துறை செயலராக இருந்த  சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு அறிவித்தது.

அதைத்தொடர்ந்து, இன்று  சஞ்சய் மல்ஹோத்ரா புதிய ஆர்பிஐ ஆளுநராக  பொறுப்பேற்றுக் கொண்டார்.   இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அப்பதவியை வகிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஞ்சய் மல்ஹோத்ரா, 1990ஆம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.  ஐஐடி-கான்பூரில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றவர். பிறகு அமெரிக்காவில் உள்ள பல்கலையில் பொதுக் கொள்கைப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

கடந்த 33 ஆண்டு காலத்தில், சஞ்சய் மல்ஹோத்ரா மத்திய அரசின் எரிசக்தி, நிதி, வரித் துறை, தகவல் தொடர்பு மற்றும் சுரங்கத் துறை என பல துறைகளில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். நிதி மற்றும் வரி விதிப்பில் பல ஆண்டு கால அனுபவம் கொண்டவர் சஞ்சய். நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு முறையின் வரிக் கொள்கைகளை உருவாக்கியதில் சஞ்சய் மல்ஹோத்ராவின் பங்கு மிக முக்கியமாக அமைந்திருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.