மலையாளத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘இவ விவஹிதரயால்’ என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சஜி சுரேந்திரன்.
இயக்குனர் சஜி கடந்த 2005-ம் ஆண்டு சங்கீதா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், சஜி – சங்கீதா தம்பதிக்கு திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின் தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் இயக்குனர் சஜி வெளியிட்டுள்ள பதிவில், “சில நேரங்களில் அற்புதங்கள் இரட்டிப்பாக வரும். இரட்டை குழந்தை பிறந்துள்ளது. கடவுளுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.