ஜெய்ப்பூர்:
எனது மகன் தோல்விக்கு துணைமுதல்வர் சச்சின் பைலட்டே காரணம் என்று என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டி உள்ளார். ,இதன் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெற்று வந்த உட்கட்சி பூசல் வெளிச்சத் துக்கு வந்ததுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் போட்டியிட்ட நிலையில், ராகுல்காந்தி தலையிட்டு, மாநில முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட்டும், மாநில துணைமுதல்வராக சச்சின் பைலட்டும் பதவி ஏற்க அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து இருவரும் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 17ந்தேதி இருவரும் பதவி ஏற்றனர். மாநில கவர்னர் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் அசோக் கெலாட் மகனும் தோல்வியை சந்தித்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித் தார். அசோக் கெலாட், ப.சிதம்பரம் போன்றவர்கள் கட்சி தலைமையை மிரட்டி தங்களது மகன்களுக்கு சீட் கேட்டனர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக் கிடையே உட்கட்சி மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், தனது மகனின் தோல்விக்கு துணைமுதல்வர் சச்சின் பைலட்தான் காரணம் என்று முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டி உள்ளார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அசோக் கெலாட், லோக்சபா தேர்தலின்போது ஜோத்பூர் தொகுதியில் போட்டியிட்ட தனது மகன் வைபவ் தோல்விக்கு சச்சின்தான் காரணம் என்றவர், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கும், சச்சின்தான் காரணம் என்றும், தேர்தல் தோல்விக்கு சச்சின் பைலட் முழு பொறுப்பை ஏற்க வேண்டும். குறைந்த பட்சம் தனது மகன் தோல்விக்காவது சச்சின் பைலட் பொறுப்பேற்க வேண்டும் என கூறி உள்ளார்.
அசோக் கெலாட்டின் கருத்தால், காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெற்று வந்த உள்கட்சி பூசல் தற்போது வெடித்து பூதாகரமாக வெளிவந்துள்ளது.
ஜோத்பூர் மக்களவை தொகுதியில் தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் போட்டி யிட்டு சுமார் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த தொகுதி சச்சின் பைலட்டிற்கு ஆதரவான தொகுதி என்றும் கூறப்படுகிறது.