ம்பை

ம்பையில் சபரிமலை தரிசன ஸ்பாட் புக்கிக் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.

கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய சபரிமலையின் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் 41 நாட்கலில் நிறைவடைந்து கடந்த டிசம்பர் 26ம் தேதி நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு மண்டல பூஜைக்காலத்தில் 33 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மகர விளக்கு பூஜைக்காக வரும் டிசம்பர் 30ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. இதையொட்டி சபரிமலை சன்னிதானம் முதல் பம்பை வரையில் தூய்மைப் படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சபரிமலை பக்தர்களுக்காக பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டாவில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.