டில்லி

விமானம் தாமதம் ஆனாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ பயணிகளுக்கு ரூ.20,000 வரை இழப்பீடு அளிக்கும் சட்ட வரைவு ஒன்றை அரசு தயாரித்துள்ளது.

சமீப காலங்களாக விமானங்கள் குறித்த நேரத்தில் கிளம்புவது இல்லை.    மிகவும் கால தாமதம் உண்டாகிறது.   சில நேரங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப் படுவதும் நிகழ்கிறது.    இதனால் பல பயணிகளுக்கு நேரம் மற்றும் பணம் இழப்பு ஏற்படுகின்றது.     இது குறித்து பயணிகளிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.   இதனால் விமானப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிவில் விமானத் துறை அமைச்சகம் ஆய்வு ஒன்றை நடத்தி ஒரு சட்ட வரைவு ஒன்றை அமைத்துள்ளது.   சிவில் விமானத்துறை செயலர் ஆர் என் சௌபே, “தற்போது விமானங்கள் தாமதத்தினாலும்,  சேவை ரத்து செய்யப்படுவ்தாலும் பயணிகள் துயருறுவதற்கு சட்டப்படி ஒன்றும் செய்ய இயலாத நிலை உள்ளது.  இதனால் இந்த சட்டத்தை மாற்றி அமைக்கும் வரைவு ஒன்று தயார் செயப்பட்டுள்ளது.

அந்த வரைவின் படி ஆறு மணிக்கு மேல் விமானம் தாமதம் ஆனால் பயணிகளுக்கு முழுக் கட்டணமும் திருப்பி அளிக்கப் படும்.   அத்துடன் இதனால் மேற்கொண்டு பயணம் செய்ய உள்ள பயணிகள் அடுத்த விமானத்தை தவற விடுவதால் அவர்களுக்கு ரூ.20000 வரை இழப்பீடு வழஙக்ப்படும்.   இது சேவை ரத்து செய்யப்படும் நேரத்திற்கும் பொருந்தும்.

இவ்வாறு அந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.   மேலும் சமீப காலமாக விமானத்தில் பயணம் செய்ய சில பயணிகளுக்கு மறுக்கப் படுகிறது.  அவ்வாறு கடைசி நேர்த்தில் பயணம் மறுக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ. 5000 இழப்பீடு வழங்கவும் இந்த வரைவில் குறிப்பிடப் பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.