கொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் இன்று கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது.
அம்மாநிலத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்ந்து மோதல் மூண்டு வருகிறது.
கடந்த 2 நாட்களில் திரிணாமுல் காங்கிரசிலிருந்து 3 எம்எல்ஏக்கள் பதவி விலகியுள்ளது மமதா அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பந்தபேஷ்வர் தொகுதி எம்எல்ஏ ஜிதேந்திர திவாரி, முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான சுவேந்து அதிகாரி, இன்று பாராக்பூர் எம்எல்ஏ ஷில்பத்ரா தத்தா என கடந்த இரு தினங்களில் 3 பேர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
விலகிய அவர்கள் இருவரும் பாஜகவில் இணைய உள்ளதாக தெரிகிறது. இந் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. மமதா பானர்ஜி, கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் இது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.