ந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரம் மந்த்ராலயம். ‘மன்ச்சாலே’ என்ற பெயராலும் பிரபலமாக அழைக்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தின் எல்லையில், துங்கபத்ரா நதிக்கரையோரம் உள்ள இந்த ஊரில் பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் குரு ராகவேந்திரா சுவாமியின் சமாதி கோயில் உள்ளது.

ஸ்ரீ ராகவேந்திரரின் தீவிர பக்தரான நடிகர் ரஜினிகாந்த் அங்கு அடிக்கடி சென்று வழிபடுவார். கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் அங்கு சென்ற ரஜினி, கோயில் கட்டிடப்பணிகளுக்காக 10 கோடி ரூபாய் அளித்ததாக தகவல் வெளியானது.

இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரிகள் மாதவ செட்டி, சுயமிந்தரா சாரி ஆகியோர், “ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்த நன்கொடை மூலம் சர்வக்ஞ மண்டபம் பின்புறமுள்ள பழைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் தங்கும் ஏசி வசதியுடன் கூடிய 25 அறைகள் கட்டப்படும். மேலும் 100 அறைகளும் கட்டப்பட உள்ளன. இதுதவிர கோயில் சுற்றியிலும் பூங்காக்கள் அமைக்கப்படும்,” என்று செய்திக்குறிப்பு வெளியிட்டார்கள்.

இதன் பிறகும் அவ்வப்போது மந்த்ராலயம் சென்ற வந்தார் ரஜினி.

இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் மந்த்ராலயம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தான் நிதி உதவி செய்து நடந்தவரும் கட்டிட பணிகளைப் பார்வையிட அவர் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.