இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை முதல் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்த அவர்கள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக கூறியுள்ளனர்.

ராணியின் உடல்நிலை குறித்த செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது என்று பிரதமர் லிஸ் டிரஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

96 வயதான ராணி எலிசபெத் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டை ஆட்சி செய்து வருகிறார், காமன்வெல்த் நாடுகளின் தலைவராக இருக்கும் இவரது உடல்நிலை குறித்து பல்வேறு நாட்டு தலைவர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.