டில்லி:
நள்ளிரவில் இளம்பெண் முன்பு திறந்த வெளியில் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட தகராறில், அந்த பெண்ணின் கணவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
டில்லியில் நேரு கேம்ப் குடிசை பகுதியில் வசிந்து வந்தவர் டாகோலியா என்ற கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி பிங்கி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் பிங்கி வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். அவர் எதிரே பக்கத்து வீட்டுக்கார் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது.
இதுகுறித்து டில்லி தென்கிழக்கு பகுதி துணைஆணையாளர் சின்மோய் பிஸ்வால் கூறியதாவது,
விசாரணையில், நள்ளிரவு 12.30 மணி அளவில் வீட்டுக்கு வெளியே வந்த பிங்கி முன்னிலையில் பக்கத்து வீட்டுக்கார் சிறுநீர் கழித்ததாகவும், இதற்கு பிங்கி எதிர்ப்பு தெரிவித்து, தனது கணவரிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில், பக்கத்து வீட்டுக்காரர் அருகில் கிடந்த சிமென்ட் சிலாபை கொண்டு டகோலியாகவை தாக்கியதாகவும், இதில் டகோலியா மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரவி என்ற பக்கத்து வீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் விசாரணை நடைபெற்ற வருகிறது என்று தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட டகோலியா மீது கொள்ளை, திருட்டு தொடர்பாக 17 வழக்குகள் உள்ளதாகவும் கூறி உள்ளார்.