இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோன்சுடன் லண்டனில் வசித்து வருகிறார்.

பிரியங்கா நடிக்கும் ‘டெக்ஸ்ட் ஃபார் யு’ என்ற படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது.

அங்கு புதிய வகை கொரோனா பரவி வருவதால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் சினிமா ஷுட்டிங் நடத்த, இங்கிலாந்து அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

இந்த வசதியை பயன்படுத்தி பிரியங்கா லண்டனில் இஷ்டம் போல் சுற்றி திரிந்துள்ளார்.

கொரோனா விதிகளை மீறி பிரியங்கா, லண்டனில் உள்ள சலூனுக்கு தனது தலைமுடியின் நிறத்தை மாற்றிக்கொள்வதற்காக சென்றுள்ளார்.
பிரியங்கா,தனது தாயார் மது சோப்ரா மற்றும் நாய்க்குட்டியையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

ஊர் முழுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நாயுடன் சாலையில், பிரியங்கா சுற்றித்திரிவதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பகுதிக்கு விரைந்த சென்ற போலீசார், பிரியங்காவை எச்சரித்துள்ளனர்.

படப்பிடிப்புக்காக முடியின் நிறத்தை மாற்ற வந்ததாக பிரியங்கா விளக்கம் அளித்துள்ளார்.

இதனால் அபராதம் எதுவும் விதிக்காமல் போலீசார் சென்று விட்டனர்.

– பா. பாரதி