வாலியர்: சாத்வி பிரக்யா தாகூர் அடிப்படையில் நல்ல பெண்தான் என்றும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் ஏற்பட்ட தொடர்பாலேயே அவர் வாழ்க்கை திசைதிரும்பியது என்றும் தெரிவித்துள்ளார் மத்திய பிரதேச மாநில அமைச்சர் கோவிந்த் சிங்.
பிரக்யா தாகூர் தனது இளம் பிராயத்தை செலவழித்த மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்திலுள்ள லஹார் என்ற நகரத்தைச் சேர்ந்தவர்தான் அமைச்சர் கோவிந்த் சிங்.
அவர் கூறியுள்ளதாவது, “பிரக்யா தாகூர், இளம்வயதில் ஒரு எளிமையானப் பெண். ஆனால், அவருக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் அகில் பாரதீய வித்யார்த்தி பரிஷத்(ABVP) ஆகிய அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகுதான், அவரின் வாழ்க்கை திசைமாறியது.
அப்பெண்ணின் மனதில் நஞ்சை விதைத்து, மதவாதத்தை புகுத்தி, முஸ்லீம்களின் மீதான வெறுப்பை வளர்த்து என்று ஒட்டுமொத்தமாக அப்பெண்ணை திசைதிருப்பி நாசம் செய்தவர்கள் அவர்கள்தான்.
எனவே, அப்பெண்ணின் செயல்பாடுகளுக்கு முழு பொறுப்பேற்க வேண்டியவர்கள் அந்த இயக்கங்களே. மேலும், பாரதீய ஜனதாவின் பங்கும் இதில் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றுள்ளார்.