ஜெய்ப்பூர்:

மாநில அரசு துறைகள் சம்பந்தமாக வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியின் இடைவேளையின் போது, திரையில் பலான படம் ஓடிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. . இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநில தலைமை செயலகத்தில் உள்ள  அரசு தேசிய தகவல்மையம் அலுவலகத்தில் நடைபெற்றுள ளது.

சம்பவத்தன்று ராஜஸ்தான் மாநில தலைமை செயலகத்தில்  உணவு மற்றும் சிவில் வழங்கல் துறை செயலாளர் முகதா சிங் தலைமையில்  அதிகாரிகள் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மாநில தகவல் மையம் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

சுமார் 10 பேர், துறை அதிகாரிகள் மற்றும் என்.ஐ.சி. பிரதிநிதிகள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும், நிலத்தின்   33 மாவட்டங்களிலிருந்தும் மாவட்ட சபை அதிகாரிகளும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொண்டு கருத்துக்களை கூறி வந்தனர்.

கூட்டத்தின் இடையில் செயலாளர் முக்தா சிங் சென்ற நிலையில், வீடியோ கான்பரன்சிங் திரையில்  பலான படம் தொடர்பான வீடியோ ஓடத் தொடங்கியது. இது அதிர்ச்சியை ஏற்படுத் தியது மட்டுமல்லாமல் சர்ச்சைகளையும் கிளப்பி உள்ளது.

இதையடுத்து, வீடியோவின் இடையே பலான படம் ஓடியது எப்படி என ஆய்வு செய்யுமாறு என்ஐசி. இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“NIC இயக்குனரின் அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்து உள்ளது.