குஜராத் மாநிலத்தில் இந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 6 மாநகராட்சிகளுக்கான தேர்தல் வரும் 21 ஆம் தேதியும், நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்துக்களுக்கான தேர்தல் 28 ஆம் தேதியும் நடக்கிறது.
இந்த தேர்தலில் அகமதாபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட போதக்தேவ் வார்டில் போட்டியிட பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத்தின் மகள் சோனால் மோடி திட்டமிட்டுள்ளார்.
பா.ஜ.க சார்பில் போட்டியிட அவர் டிக்கெட் கேட்டுள்ளார்.
சோனால் மட்டுமில்லாமல், குஜராத்தில் உள்ள பா.ஜ.க. தலைவர்களின் பல வாரிசுகள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு செய்துள்ளனர்.
ஆனால் குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர் சி.பி.பட்டீல் “உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. தலைவர்களின் குடும்பத்தாருக்கு டிக்கெட் அளிக்க மாட்டோம்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எனவே, மோடியின் அண்ணன் மகளுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காது என்றே தெரிகிறது.
– பா. பாரதி