புதுடெல்லி:
ந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் இருக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு இந்தியா முன்னேறி இருந்தாலும் அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.

தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மிக அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து. வருகிறது தமிழகத்தில் இன்று மட்டும் 800-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த ஆலோசனையில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]