ரோத்தஸ்

சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் தற்போது உயிருடன் வந்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் பீகாரின் ரோத்தஸ் மாவட்டத்தில் திவாரியா கிராமத்தில் வசித்து வந்த நாதுனி பால் (வயது 50 காணாமல் போய் விட்டார் என போலீசில் புகார் அளிக்கப்பட்டது., அவருடைய குடும்பத்தினர் போலீசிடம் சென்று, 4 உறவினர்கள் பாலின் நிலங்களை அபகரித்து கொண்டு, அவரை படுகொலை செய்து விட்டனர் என குற்றச்சாட்டாக கூறினர்.

ர்ன்ச்ப்ர்ர் கொலை வழக்கு பதிவாகியும் அப்போது பாலின் உடல் கண்டெடுக்கப்படவில்லை. பாலின் தந்தை வழி உறவினர்களான ரதி பால், விம்லேஷ் பால், பகவான் பால் மற்றும் சத்யேந்திர பால் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இன்று வரை  வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

உண்மையில் வீட்டை விட்டு வெளியேறிய நாதுனி பால் பல ஆண்டுகளாக உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரில் தலைமறைவாக வாழ்ந்து வந்திருக்கிறார். அவர மேல் எழுந்த சந்தேகத்தின் பேரில் அவரை பற்றி கிராமத்தினர் போலீசில் கூறியுள்ளனர். விசாரணையில், அவர் பீகார் காவல் நிலையத்தில், இறந்த நபர் என பதிவு செய்யப்பட்ட நாதுனி என்பது தெரிய வந்துள்ளது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அவருடைய சிறு வயதில் பெற்றோர் உயிரிழந்து நிலையில் நீண்ட நாட்களுக்கு முன்பு மனைவியும் அவரை விட்டு சென்று விட்டார். எனவே அவர் பீகாரில் உள்ள வீட்டுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகி விட்டன என போலீசாரிடம் கூறியுள்ளார்.  முழு விசாரணைக்கு பின்னர், போலீசார் அவரை சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.

சுமார் 17 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வரும் சூழலில், கொலையானவர் திரும்பி வந்துள்ளது கிராமத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது