கமதாபாத்

டிதார் அனாமத் அந்தோலன் சமிதி தலவர் நரேந்திர படேல் தனக்கு பாஜக ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

படிதார் அனாமத் அந்தோலன் சமிதி  என்னும் படேல் வகுப்பினரின் அமைப்பின் தலைவர் நரேந்திர படேல்.   இவர் சென்ற மாதம் பா ஜ க வின் தலைவர் ஹர்திக் படேல் மீது புகார் கொடுத்து பின் அதை திரும்பப் பெற்றதும் தெரிந்ததே.  இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் பா ஜ கவில்  இணைந்தார்.   தற்போது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனக்கு பா ஜ க ஒரு கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்து கட்சி மாறச் சொன்னதாக தெரிவித்துள்ளார்.

அவர் அந்த சந்திப்பில், “இதற்கு முன்பு பா ஜ கவில் இணைந்த வருண் படேல் தன்னை குஜராத் பா ஜ க தலைவர் ஜிதுபாய் வகானி மற்றும் பல தலவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவருடன் சில அமைச்சர்களும் இருந்தனர்.   அவர்கள் என்னிடம் ரூ. 10 லட்சம் அடங்கிய ஒரு பையை கொடுத்தனர்.  அது முன் பணம் எனவும் மீதி ரூ.90 லட்சம் நாளை நான் கட்சி நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டதும் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.   மேலும் அவசர அவசரமாக பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டி நான் கட்சியில் இணைந்ததாக அறிவித்து விட்டனர்” என தெரிவித்தார்.

மேலும், “நான் ஒரு கோடிக்கு விலை பேசப்பட்டேன். ஒரு கோடியா? ரிசர்வ் வங்கியில் உள்ள அத்தனை பணத்தையும் கொட்டிக் கொடுத்தாலும் என்னை வாங்க யாராலும் முடியாது. நான் இறக்க நேர்ந்தாலும் கொள்கைக்காக போராடுவதை விட மாட்டேன்” எனக் கூறி உள்ளார்.

இதற்கு வருண் படேல், “இவை அனைத்தும் கட்டுக்கதை.  பா ஜ க தர்ப்பில் நரேந்திரபடேலுக்கு பணம் எதுவும் தரப்படவில்லை” எனக் கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]