புதுடெல்லி:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜுன் 17 முதல் ஜுலை 26 வரை நடக்கிறது. ஜுன் 19-ம் தேதி சபாநாயகர் தேர்வு நடக்கிறது.


பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜுன்17 முதல் ஜுலை 26 வரை நடைபெறுகிறது.
சபாநாயகர் தேர்வு ஜுலை 19-ம் தேதி நடக்கிறது.

ஜுலை 5-ம் தேதி பட்ஜெட்

பாஜக அரசு இடைக்கால பட்ஜெட்டைத் தான் தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்தது.
தற்போது முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் ஜுலை 5-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.